மேலும் செய்திகள்
குழாய் உடைப்பால் சேதமான சாலை சீரமைப்பு
15-Aug-2024
திருப்பூர் : திருப்பூர் நகர மற்றும் ஊரகப்பகுதிகளில், ரோட்டில் பதிக்கப்பட்டுள்ள குழாய் உடைப்பால், குடிநீர் விரயமாவதுடன், சாலையும் சேதமடைகிறது.திருப்பூர் மாநகராட்சி உள்ளிட்ட பிற உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, ரோட்டோரம் குழாய் பதிக்கப்படுகிறது.இந்த குழாய்களில் அடிக்கடி ஏற்படும் உடைப்பால், நீர் வெளியேறுகிறது. இதனால், ரோடும் சேதமடைகிறது. அவ்வகையில், திருப்பூர், வ.உ.சி., நகர் முதல் வீதியில் சில நாட்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. அதோடு சாலையும் ரோடும் சேதமடைகிறது.எனவே, பிரதான ரோடுகள், வீதி ரோடுகள் அனைத்தும் மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப விரிவாகி கொண்டே செல்லும் நிலையில் வரும் காலங்களில், குழாய் பதிப்பு பணி மேற்கொள்ளும் போது, சாலையின் எல்லையை கண்டறிந்து குழாய் பதிக்க வேண்டும்.
15-Aug-2024