உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் சீரமைப்பு

குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் சீரமைப்பு

பல்லடம்:'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால், பல்லடம் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதுபார்க்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளது.பல்லடம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க வரும் பொதுமக்களின் வசதிக்காக, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், நீண்ட நாட்களாக பராமரிக்கப்படாமல், காற்று மட்டுமே வந்த நிலையில், இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில், சுட்டிக்காட்டப்பட்டது. இதனையடுத்து, நேற்று முன்தினம் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் உடனடியாக பழுதுபார்க்கப்பட்டது. எனவே, இனி, போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் பொதுமக்களின் தாகம் தீர்க்கப்படும் என்பதில் ஐயமில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை