மேலும் செய்திகள்
வாக்காளர் பட்டியல் தொடர்பாக கட்சியினருடன் ஆலோசனை
24-Aug-2024
திருப்பூர்:''வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அனைத்து வாக்காளர்களின் வீடுகளுக்கும் நேரில் சென்று, வாக்காளர் பட்டியல் விவரம் சரிபார்ப்பு பணியில் வேண்டும்; இதன் மூலம் வாக்காளர் பட்டியல் குளறுபடிகளைத் தவிர்க்க முடியும்'' என்று அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்தனர். வரும் அக்., 29ல் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு, 'சுருக்கமுறை திருத்தம் - 2025' துவங்குகிறது. நவ., 28ம் தேதி வரை நடைபெறும் சுருக்கமுறை திருத்தத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், மேற்கொள்ளப்படுகிறது. வரும் ஜன., 1ம் தேதி 18 வயது பூர்த்தியாகும் இளம் வாக்காளர்களும் பட்டியலில் இணைக்கப்படுகின்றனர்.வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் முன்னிலை வகித்தார். தேர்தல் பிரிவு தனி தாசில்தார் தங்கவேல் மற்றும் ஆர்.டி.ஓ.,க்கள், தாசில்தார்கள் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்வைத்த கருத்துக்கள்:வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ.,), நேர்மையோடு அனைத்து வாக்காளர் வீடுகளுக்கும் நேரடியாக சென்று, சரிபார்ப்பு பணியில் ஈடுபடவேண்டும். இறந்தோர் விவரங்களை பெற்று, பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும்.தேர்தல் கமிஷன் பி.எல்.ஓ.,க்களை நியமித்துள்ளதுபோல், அரசியல் கட்சியினரும் நியமித்துள்ளோம். அவர்களிடம் இறந்த வாக்காளர் விவரங்களை பெற்று, உறுதிப்படுத்தி, பட்டியலில் இருந்து நீக்கம் செய்யவேண்டும்.உள்ளாட்சி அமைப்புகள் இறப்புச்சான்று வழங்கும்போதே, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பெற்று விட வேண்டும். இரட்டைப்பதிவு உள்ளிட்ட குளறுபடிகள் களைந்து, நுாறு சதவீதம் செம்மையான வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கு, வாக்காளர் ஆதார் இணைப்பது அவசியம்; இதுகுறித்து, வாக்காளர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.
24-Aug-2024