உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நீலகிரி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளருக்கு வரவேற்பு

நீலகிரி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளருக்கு வரவேற்பு

அவிநாசி;நீலகிரி லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.கோவை செல்லும் வழியில், அவிநாசி - திருப்பூர் பைபாஸ் அருகில், அவிநாசி வடக்கு ஒன்றிய செயலாளர் வேலுசாமி தலைமையில், வேட்பாளருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நகர இளைஞரணி செயலாளர் ஜெயபால், நகர துணைச் செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தனர்.மாவட்ட துணை செயலாளர் லதா, பூண்டி நகர செயலாளர் பழனிசாமி, ஜெ., பேரவை ஒன்றிய செயலாளர் தம்பி ராஜேந்திரன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கார்த்திக் ராஜா, ஐ.டி., பிரிவு துரைபாண்டி, ஹரிஹரன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை