அமைச்சர்கள் எங்கே? வாசகத்தை டிரண்ட் ஆக்க திட்டம்
திருப்பூர்:வெள்ளகோவில், காங்கயம், தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில், தெருநாய்கள் கடித்து, ஆடுகள் பலியாகும் சம்பவம் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், அப்பகுதி விவசாயிகள் இணைந்து, ஆலோசனைக்கூட்டம் நடத்தினர்.அதில், இந்த விவகாரத்தில், இன்னும், 10 நாட்கள் பொறுமையாக இருப்பதென தீர்மானிக்கப்பட்டது.தெருநாய்கள் தாக்கி பலியாகும் ஆடுகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகை, சந்தை மதிப்புக்கு பொருத்தமில்லாமல் இருந்தாலோ, இழப்பீடு அறிவிப்பில் காலதாமதம் ஏற்பட்டாலும், மிகப்பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுப்பது, குறிப்பாக, உள்ளூர் நிகழ்ச்சிகளுக்கு, அமைச்சர்கள் வரும் போது, அவர்களுக்கும் கருப்புக்கொடி காட்டுவது, வீதிகள் தோறும், 'அமைச்சர்கள் எங்கே?' என்ற வாசகத்தை பிரபலப்படுத்துவது, எனவும்முடிவெடுக்கப்பட்டது.