உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநகராட்சி கமிஷனர் பெயரில் போலி ஆவணம் அளித்தது யார்?

மாநகராட்சி கமிஷனர் பெயரில் போலி ஆவணம் அளித்தது யார்?

திருப்பூர்; மாநகராட்சி கமிஷனர் பெயரில் இருந்த மின் இணைப்பை இடமாற்றம் செய்ய போலி ஆவணம் அளித்தவர் குறித்து மாநகராட்சி விவரம் கேட்டுள்ளது.திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி ஆழ்குழாய் கிணற்று மோட்டார் மின் இணைப்பு, மாநகராட்சி கமிஷனர் பெயரில் 20 ஆண்டாக பயன்பாட்டில் இருந்தது. கடந்தாண்டு டிச., மாதம் இணைப்பை பெயர் மாற்றம் செய்யவும், இடமாற்றம் செய்யவும் மின் வாரியத்துக்கு விண்ணப்பிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டன. சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், விஷயம் வெளியே தெரிந்தது. மின் இணைப்பு பெயர் மற்றும் இடமாற்றம் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர்ந்து வலியுறுத்தியதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் தற்போது நடவடிக்கையைத் துவங்கியுள்ளது. மாநகராட்சி 2வது மண்டல உதவி கமிஷனர் முருகேசன், இந்த மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்தவர் விவரம், சமர்ப்பிக்கப்பட்ட போலி ஆவணங்கள் ஆகியவற்றின் விவரங்களை வழங்க கேட்டு, பாண்டியன் நகர் மின் வாரிய அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ