உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வன சுற்றுலாவில் பிளாஸ்டிக் பொருள் எதற்கு?

வன சுற்றுலாவில் பிளாஸ்டிக் பொருள் எதற்கு?

திருப்பூர் : தேசிய வனவிலங்கு தினத்தை முன்னிட்டு, ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக் கோட்டம், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி, நாட்டு நலப் பணித் திட்டம் அலகு -- 2 சார்பில், கூலிபாளையத்தில் உள்ள நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயத்தை பார்வையிடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.என்.எஸ்.எஸ்., அலகு - -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வனவர் வெங்கடாசலம் பேசுகையில்,''வனவிலங்குகளின் வாழ்விடங்களைப் பாதுகாத்தல் மற்றும் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். வனவிலங்குகள் நமது சுற்றுச்சூழல் அமைப்புகளின் நுட்பமான சமநிலையை பராமரிப்பதில், முக்கிய பங்கு வகிக்கிறது. வன சுற்றுலாவுக்கு செல்லும் போது பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்ல கூடாது,'' என்றார்.தொடர்ந்து, மாணவ செயலர்கள் மது கார்த்திக், கிருஷ்ணமூர்த்தி, நவீன்குமார் ஆகியோர் தலைமையில் மாணவ, மாணவியர், நஞ்சராயன் குளத்தில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்றினர். நிகழ்ச்சியில், வனச்சரக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை