உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 2 அடி ஆழம் தோண்டப்பட்டது ஏன்?

2 அடி ஆழம் தோண்டப்பட்டது ஏன்?

பல்லடம்: பல்லடம் அடுத்த கணபதிபாளையம் ஊராட்சி, ஓம்சக்தி நகரில் துவங்கி -சிரபுஞ்சி நகர் வரை, 1.38 கி.மீ., துாரம், 1.37 கோடி ரூபாய் மதிப்பில் ரோடு போடும் பணி நடந்து வருகிறது. இதற்காக, இரண்டடி ஆழம், பள்ளம் தோண்டப்பட்டு மண் எடுக்கப்பட்டுள்ளது. இது, பொதுமக்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், 'பொதுவாக ரோடு போடும்போது, ஏற்கனவே உள்ள மண் மீது ஜல்லி கற்கள் போட்டு ரோடு ரோலர் மூலம் சமன்படுத்திய பின் ரோடு பணி மேற்கொள்ளப்படும். ஆனால், இங்கு, 2 அடிக்கு கீழ் பள்ளம் தோண்டப்பட்டு, இதிலுள்ள செம்மண் வெளியே எடுக்கப்பட்ட பின் ரோடு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எதற்காக இவ்வளவு பள்ளம் ஏற்படுத்தப்பட்டு, ரோடு பணி நடக்கிறது என்று தெரியவில்லை. செம்மண் வெளியே எடுத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுகிறது. இதற்கு ஏற்ப, இங்கு எடுக்கப்பட்ட செம்மண் பல்வேறு இடங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், ரோடு எத்தனை அடி, மதிப்பீடு, ஒப்பந்ததாரர், எந்த திட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்த எந்த தகவல்களும் வைக்கப்படவில்லை. விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்'என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ