சந்தை மதிப்பு வழிகாட்டி ஆன்லைனில் வெளியாகுமா?
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக, வரைவு வழிகாட்டி பதிவேடு தயார் படுத்தப்பட்டுள்ளது. இது சார் பதிவாளர் அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆட்சேபனை இருப்பின் தெரிவிக்கலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் இந்த வரைவு வழிகாட்டி மதிப்பு பதிவேடுகளை, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம். இதன் மூலம் சிரமமின்றி அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளவும், கருத்து பதிவு செய்யவும் வசதியாக இருக்கும் என்கின்றனர் பொதுமக்கள்.