மேலும் செய்திகள்
குண்டும், குழியுமான சாலை: பொதுமக்கள் அவதி
18-Feb-2025
மோசமான ரோடுகளால் விபத்து அதிகரிப்பு
19-Feb-2025
சுவர் ஏறி குதித்து வகுப்பறையை நாறடித்தவர்கள் யார்?
29-Jan-2025 | 1
திருப்பூர் மாநகர பாப்பநாயக்கன்பாளையம் மா.கம்யூ., கிளை செயலாளர் மனோகரன் தலைமையில், அக்கட்சியினர் இரண்டாம் மண்டல தலைவர் கோவிந்தராஜிடம் அளித்த மனு:திருப்பூர் மாநகராட்சி, 18வது வார்டு கட்டபொம்மன் நகரில் இருந்து, ஆறாவது வார்டு கவுண்டநாயக்கன்பாளையம் வரை செல்லும் பாப்பநாயக்கன்பாளையம் பிரதான சாலை மோசமான நிலையில் உள்ளது. ரோடு சீர் குலைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதுதவிர, சாக்கடை கழிவு நீர் ரோட்டில் குளம்போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. பாப்பநாயக்கன்பாளையம் செல்லும் ரோடும் குண்டும், குழியுமாக உள்ளது. சாக்கடை கால்வாய் உடைந்து, குறுகலான இந்த பாதையில்தான் ஆபத்தான நிலையில் குழந்தைகள் பள்ளி சென்று வருகின்றனர். பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
18-Feb-2025
19-Feb-2025
29-Jan-2025 | 1