மேலும் செய்திகள்
'பட்டய கணக்காளருக்கு அதிக தேவை உள்ளது'
28-Feb-2025
திருப்பூர்; ''அனைத்து துறைகளிலும், பெண்கள் சிறப்பாக முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்,'' என, அமைச்சர் கயல்விழி பேசினார்.அகில இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தின், திருப்பூர் கிளை சார்பில், சர்வதேச மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. திருப்பூர் கிளை தலைவர் தருண் தலைமை வகித்தார்.விழாவில், மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி பெண் ஆடிட்டர்களுக்கு சால்வை அணிவித்து பேசியதாவது:அனைத்து துறைகளிலும், பெண்கள் சிறப்பாக முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். மகளிரை ஊக்குவிக்கும் வகையில்தான், மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.பட்டய கணக்காளர் போன்ற துறைகளில், பெண்களின் பங்கு இன்றியமையாதது. பெண் கல்வி, பெண்களுக்கான சம உரிமைக்காக, பல்வேறு தலைவர்கள் பாடுபட்டனர். தமிழகஅரசு, பல்வேறு வகையில், பெண்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டுக்காக சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, இவ்வாறு, கயல்விழி கூறினார்.திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். பெண்களுக்கான ஊட்டச்சத்து தேவைகள் குறித்து, சென்னையை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் லாவண்யா பேசினார்.ஆடிட்டர் சஷ்ரிகா, ஆடிட்டிங் குறித்த அறிவுசார் தொழில்நுட்பத்தை விளக்கி பேசினார். விழாவில், ஆடிட்டர்கள், மாணவ, மாணவியர் திரளாக பங்கேற்றனர். கிளை செயலாளர் சபரிஷ் நன்றி கூறினார்.விழா ஏற்பாடுகளை, திருப்பூர் கிளை மகளிர் மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் ரேகா மற்றும் ரோகிணிசெய்திருந்தனர்.
28-Feb-2025