சட்ட விரோதமாக தங்கிய 10 வங்கதேசத்தினர் கைது
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், பல்லடம், மங்கலம், ஊத்துக்குளி பகுதியில் வங்கதேசத்தினர் தங்கியிருப்பது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரித்தனர். அதில், ஊத்துக்குளி கவுண்டம்பாளையத்தில் தங்கியிருந்த முகமது வாகத் அலி, 41, உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து போலி ஆவணங்கள் வாயிலாக வாங்கப்பட்ட ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.போலீசார் கூறியதாவது:திருப்பூர் மாவட்டத்தில், மூன்று ஸ்டேஷன்களை சேர்ந்த தனிப்படை போலீசார் அந்தந்த பகுதிகளில் வடமாநிலத்தினர் போர்வையில் தங்கியிருந்த வங்கதேசத்தினரை கைது செய்தனர். சிலரிடம் ஆவணங்கள் இருந்தன. மற்றவர்கள் முறைகேடாக தங்கியிருந்தது தெரிந்தது.கைது செய்யப்பட்டவர்களில் சிலர், இரண்டு ஆண்டுகள் வரை திருப்பூரில் தங்கி, குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒரு முறை வேறு இடங்களுக்கு மாறி வேலை செய்து வந்தது தெரிந்தது. இவ்வாறு கூறினர்.