உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 10 தாசில்தார் பணியிட மாற்றம்

10 தாசில்தார் பணியிட மாற்றம்

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், தாசில்தார் நிலையிலான பத்து பேரை பணியிட மாறுதல் செய்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.அதன் விவரம் வருமாறு:கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக மேலாளராக பணிபுரியும் (குற்றவியல்) சரவணன், திருப்பூர் தெற்கு தாசில்தாராகவும், அங்கு பணிபுரியும் மயில்சாமி, கலெக்டர் அலுவலக மேலாளராகவும், கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) ஜெயசிங் சிவக்குமார், கோட்ட கலால் அலுவலராகவும்; அங்கு பணிபுரியும் ராகவி, மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.திருப்பூர் வடக்கு தாசில்தார் மகேஸ்வரன், கலெக்டர் அலுவலகத்துக்கு அலுவலக மேலாளராகவும் (பொது, கலால் உதவி கமிஷனர் அலுவலக முன்னாள் அலுவலக மேலாளர் ராமலிங்கம், மீண்டும் அதே பணியிடத்துக்கும், முத்திரைத்தாள் தனி தாசில்தார் பாபு, வாணிப கழக கிடங்கு மேலாளராகவும், அங்கு பணிபுரியும் ஜெகதீஸ்குமார், முத்திரைத்தாள் தனி தாசில்தாராகவும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் கவுரி சங்கர், உடுமலை தாசில்தாராவும், மடத்துக்குளம் தாசில்தார் பானுமதி, கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மை பிரிவு தனி தாசில்தாராகவும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

தற்காலிக பதவி உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் துணை தாசில்தார் மூவருக்கு, தாசில்தாராக தற்காலிக பதவி உயர்வு வழங்கி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அவ்வகையில், காங்கயம் வாணிப கிடங்கு உதவி மேலாளராக பணிபுரியும் கதிர்வேல், திருப்பூர் வடக்கு தாசில்தாராகவும், கலெக்டர் அலுவலக துணை தாசில்தார் குணசேகரன், மடத்துக்குளம் தாசில்தாராகவும், 'ஓ' பிரிவு தலைமை உதவியாளர் சபரிகிரி, பல்லடம் தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.தாசில்தார் மற்றும் துணை தாசில்தார்கள், பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ள இடங்களில் உடனடியாக பொறுப்பேற்கவேண்டும் என, கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ