இலக்கிய திறனறி தேர்வு 1,002 பேர் எழுதினர்
உடுமலை:உடுமலையில், தமிழ் இலக்கிய திறனறி தேர்வை, 1,002 மாணவ, மாணவியர் எழுதினர். தமிழக அரசு, பள்ளி மாணவர்களிடம் தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்த திறனறி தேர்வை நடத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் தேர்வு நடத்தப்பட்டு, அதிக மதிப்பெண் பெறும், 1,500 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர்; அவர்களுக்கு, மாதந்தோறும், ரூ. 1,500, இரு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். நடப்பாண்டுக்கான தேர்வு உடுமலையில் மூன்று மையங்களில் நடந்தது. தேர்வு எழுத, 1,075 பேர் விண்ணப்பத்திருந்த நிலையில், 1,002 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.