உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவட்ட கலைத்திருவிழா 1,078 மாணவர் பங்கேற்பு

மாவட்ட கலைத்திருவிழா 1,078 மாணவர் பங்கேற்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட கலைத்திருவிழா நிறைவு நாளில், அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த, 1,078 மாணவ, மாணவியர் பங்கேற்று திறமை காட்டினர். திருப்பூர் மாவட்ட கல்வித்துறை சார்பில், மாவட்ட கலைத்திருவிழா, கடந்த, 5ம் தேதி முதல் நடந்து வருகிறது. துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கான கலைத்திருவிழா நிறைவடைந்த நிலையில், நேற்று ஜெய்வாபாய், நஞ்சப்பா பள்ளியில், அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு கலைத்திருவிழா நடந்தது. ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு, மேல்நிலைப் பள்ளிகள் பிரிவில், 591 பேர் பங்கேற்றனர். ஒன்று முதல் ஐந்து, நடுநிலைப்பள்ளிகள் பிரிவில், 487 பேர் என மொத்தம், 1,078 பேர் பங்கேற்றனர். கவன்கலை, நுண்கலை, இசை (வாய்ப்பாட்டு), கருவி இசை, நடனம், நாடகம் உள்ளிட்ட தலைப்புகளில், 81 வகையான போட்டிகள் நடந்தது. மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து, தங்கள் குழந்தைகளின் திறமையை காண பெற்றோர் ஆர்வத்துடன்திரண்டு வந்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை