உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு

திருப்பூர்; பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்றது. இன்று முதல் மதிப்பெண் பதிவேற்றும் பணி நடக்கிறது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்., 21ம் தேதி, திருப்பூர், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தாராபுரம் தேன்மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரு மையங்களில் துவங்கியது. காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை நடந்த பணியில், மதிப்பீட்டு அலுவலர், மதிப்பெண் உள்ளீட்டாளர், சரிபார்க்கும் அலுவலர், அட்டவணையாளர் என, 1,750 பேர் ஈடுபட்டனர். இந்நிலையில், பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்., 30ம் தேதி மாலையுடன் முடிவடைந்தது.மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலைகல்வி) காளிமுத்து கூறுகையில், 'விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது.தேர்வுத்துறை வழிகாட்டுதல்களை பின்பற்றி இன்று (மே 2ம் தேதி) முதல் இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றும் பணி துவங்கும். வரும், 19ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை