13 மாணவர்களுக்கு ப்ரித்வி நிறுவனம் உதவி
திருப்பூர்; பொறியியல் படிப்பு பயில, 13 மாணவ, மாணவியருக்கு ப்ரித்வி நிறுவனம் சார்பில், நிதி உதவி வழங்கப்பட்டது.கொரோனா தொற்று மற்றும் இதர காரணங்களால் பெற்றோரை இழந்த நிலையில், பிளஸ்2 பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற திருப்பூர் மாவட்டத்தை, 13 மாணவ, மாணவியருக்கு பொறியியல் பட்டப்படிப்பு பயில ப்ரித்வி இன்னர் வேர்ஸ் நிறுவனம் சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டது.அவ்வகையில், ஓராண்டுக்கான கல்வி உதவி தொகையான, 8 லட்சத்து, 28 ஆயிரத்து, 750 ரூபாய்க்கான காசோலையை அந்நிறுவன மேலாண்மை இயக்குனர் பாலன், கலெக்டர் கிறிஸ்துராஜிடம் வழங்கினார்.