மேலும் செய்திகள்
உழவர் பாதுகாப்பு திட்டம்விண்ணப்பிக்க அழைப்பு
07-Dec-2024
திருப்பூர்: விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த கூலி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் இணைக்கப்பட்டு வருகின்றனர்.இத்திட்டத்தில் இணைய 2.5 ஏக்கர் நஞ்சை அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வைத்துள்ள விவசாயிகள்; விவசாயம் சார்ந்த கூலி தொழிலில் ஈடுபட்டுள்ளோர் தகுதியானவர்கள்.இத்திட்டத்தில் இணையும் பயனாளிகள் சாலை விபத்து தவிர்த்த பிற விபத்தால் உயிரிழந்தால், ஒரு லட்சம் ரூபாய், இயற்கை மரணத்துக்கு 20 ஆயிரம், ஈமச்சடங்கு உதவி தொகை, 2,500 ரூபாய் அவரது குடும்பத்தாருக்கு வழங்கப்படும்.மேலும், உறுப்பினர் மகன் திருமணத்துக்கு, 8 ஆயிரமும், மகள் திருமணத்துக்கு, 10 ஆயிரமும் வழங்கப்படும்.இது தவிர உறுப்பினர் குழந்தைகள் கல்லுாரி படிப்பு, விடுதிக் கட்டணம் போன்ற கல்வி உதவி தொகை பெறலாம். இத்திட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் இது வரை 1.43 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், வரும், 27 மற்றும் ஜன., 3ம் தேதி, அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தலைமையில் நடக்கும் சிறப்பு முகாமில் பங்கேற்று விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
07-Dec-2024