உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  183 கிலோ கஞ்சா தீ வைத்து எரிப்பு

 183 கிலோ கஞ்சா தீ வைத்து எரிப்பு

திருப்பூர்: திருப்பூரில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, 183 கிலோ கஞ்சா நேற்று தீயிட்டு அழிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவு செய்யப்பட்ட 160 வழக்குகளில், 183.823 கிலோ கஞ்சா; 17,800 கிலோ குட்கா; 22 லிட்டர் சிரப் மற்றும் 110 டேபென்டடோல் மாத்திரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதை பொருள் அழிப்பு குழு தலைவரான கோவை டி.ஐ.ஜி., சசிமோகன் மற்றும் போதை பொருள் அழிப்பு குழு உறுப்பினர்கள் திருப்பூர் மாவட்ட எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ், உள்பட போலீசார், கோவை - செட்டிபாளையம் பகுதியில் உள்ள பயோ வேஸ்ட் தனியார் நிறுவனத்தில் நேற்று, பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களை தீயிலிட்டு அழித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ