மேலும் செய்திகள்
16 கிலோகுட்கா பறிமுதல்
17-Nov-2024
அவிநாசி: அவிநாசி அருகே பழங்கரை - இந்திரா காலனி பிரிவு பகுதியை சேர்ந்தவர் மருதாசலமூர்த்தி மகள் அவந்திரா, 19, அவிநாசி, கங்கவர் வீதியை சேர்ந்த ரமேஷ் மகள் மோனிகா, 19.அவந்திகாவும், மோனிகாவும், அவிநாசி அருகேயுள்ள தனியார் கல்லுாரியில், இறுதியாண்டு படித்து வந்தனர். நெருங்கிய தோழிகளான இருவரும் வகுப்பு முடிந்த பின், அம்மாபாளையத்திலுள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோரில், பகுதி நேரமாக பணியாற்றி வந்தனர். நேற்று அவந்திகாவின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், இருவரும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.தகவலின் பேரில், அவிநாசி போலீசார் மாணவியர் உடலை மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவிநாசி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
17-Nov-2024