உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டூவீலர் மீது கார் மோதல் 2 கட்டட தொழிலாளி பலி

டூவீலர் மீது கார் மோதல் 2 கட்டட தொழிலாளி பலி

தாராபுரம்: திருப்பூர் அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் இருவர் பரிதாபமாக இறந்தனர்.திருப்பூர் மாவட்டம், தாராபுரம், என்.காஞ்சி புரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன், 35; கட்டட தொழிலாளி. இவருடன் வேலை செய்யும் மாரிமுத்து, 34 என்பவருடன் நேற்று முன்தினம் மதியம் உணவு வாங்க டூவீலரில் குண்டடம் சென்றார்.ஓட்டலில் உணவு பார்சல் வாங்கி கொண்டு திரும்பி கொண்டிருந்தனர். குண்டடம் ரோடு, சங்கபாளையம் பிரிவு அருகே வந்த போது, தொடர்ந்து வந்த கார், டூவீலர் மீது மோதியது.இந்த விபத்தில், படுகாயமடைந்த கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.மாரிமுத்துவை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து குண்டடம் போலீசார்விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ