மேலும் செய்திகள்
சில வரிகள்...
03-Jan-2025
திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:வரும், 15ம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் 26ம் தேதி குடியரசுதினம் கொண்டாடப்படுகிறது. இந்த இரு நாட்களிலும், அனைத்துப் பகுதியிலும் மது விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது.இந்த இரு நாட்களிலும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள், அவற்றுடன் இணைந்த பார்கள், உரிமம் பெற்ற பார்கள், ரெஸ்டாரண்ட்களுடன் உள்ள பார்கள் அனைத்தும் மூடப்பட்டு, மது விற்பனை முற்றிலும் தடை செய்யப்படும். இதனை மீறுவோர் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
03-Jan-2025