உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காம்பவுண்ட் சரிந்து 2 பேர் பலி; சடலம் வாங்க மறுத்து மறியல்

காம்பவுண்ட் சரிந்து 2 பேர் பலி; சடலம் வாங்க மறுத்து மறியல்

திருப்பூர்; கருவலுார், உப்பிலிபாளையம் கிராமத்தில் சண்முகம் என்பவரின் தோட்டத்தில் சில நாட்களாக கோழிப்பண்ணை அமைக்க கட்டடம் கட்டும் பணி நடந்து வந்தது. இதில், நிலக்கோட்டையை சேர்ந்த ரமேஷ், 46, அந்தோணி, 55, சுந்தரம், 42, முத்தாள், 40 என, நான்கு பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். 15 அடி உயரத்துக்கு ஹாலோ பிளாக் கற்கள் கொண்டு, இருபுறமும் காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அந்த சுவர் மீது சிமென்ட் கலவை பூசுவதற்கு சாரம் கட்டும் பணி நடந்தது. அப்போது சுவர் இடிந்து, பணியில் இருந்த ரமேஷ், அந்தோணி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர். சாலை மறியல் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு இறந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனை செய்ய கொண்டு வரப்பட்டது. நேற்று பரிசோதனை முடிந்த பின் சடலத்தை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க இருந்தது. ஆனால், உரிய பாதுகாப்பு இல்லாமல், காம்பவுண்ட் சுவரை கட்டுமாறு கூறினர்; அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி குடும்பத்தினர், உறவினர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனை முன், தாராபுரம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற திருப்பூர் தெற்கு போலீசார் பேச்சு நடத்தி, இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். பின், அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ