வங்கதேசத்தினருக்கு 2 ஆண்டு
திருப்பூர்: முறைகேடாக தங்கியிருந்த வங்கதேசத்தினர், மூன்று பேருக்கு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பளித்தது. திருப்பூர், இடுவம்பாளையத்தில் பிப்., 24ல், ஒரு வீட்டில் வட மாநிலத்தினர் போர்வையில் தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த மூசா அலி, 26, அவரது மனைவி நிஷா அக்தர், 23 மற்றும் ரோனி, 22, ஆகிய மூன்று பேரை, வீரபாண்டி போலீசார் கைது செய்தனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் அவர்கள் தங்கி யிருந்தது தெரிந்தது. வழக்கை விசாரித்த திருப்பூர் கூடுதல் மாவட்ட கோர்ட் நீதிபதி ஸ்ரீதர், மூன்று பேருக்கும், தலா இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.