ஆம்னி பஸ் கவிழ்ந்து 20 பயணிகள் காயம்
திருப்பூர்; கோவையிலிருந்து காரைக்குடி நோக்கிச் சென்ற ஆம்னி பஸ், ஊதியூர் அருகே கவிழ்ந்ததில், 20 பயணிகள் காயமடைந்தனர்.கோவையிலிருந்து காரைக்குடி நோக்கி ஒரு ஆம்னி பஸ் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. பஸ்சை கோவையைச் சேர்ந்த ரமேஷ், 35 ஓட்டி வந்தார். பஸ்சில் 23 பயணிகள் இருந்தனர்.நள்ளிரவில், திருப்பூர் மாவட்டம் ஊதியூர் பகுதியைக் கடந்து சென்றது. என்.காஞ்சிபுரம் அருகே பஸ், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் பக்கவாட்டில் கவிழ்ந்தது. பயணிகள் 20 பேருக்கு காயமேற்பட்டது. காயமடைந்தவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.