உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 20 ஆண்டு

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 20 ஆண்டு

திருப்பூர் : சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபருக்கு திருப்பூர் மகிளா கோர்ட் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.திருப்பூர் மாவட்டம், காங்கயத்தை சேர்ந்த, 17 வயது சிறுமி, கடந்த 2022-ம் ஆண்டு திடீரென மாயமானார். காங்கயம் போலீசார், சிறுமி சென்னையில் இருப்பதை கண்டறிந்து மீட்டனர். பெற்றோருடன் கோபித்துக்கொண்டு, வீட்டை விட்டு வெளியேறி, வேலை தேடி சிறுமி சென்னைக்கு சென்றுள்ளார். அங்கு சென்னை முகலிவாக்கத்தை சேர்ந்த விஷ்ணு, 28, என்பவர், ஓட்டலில் அறை எடுத்து தங்க வைத்து, சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக கூறி, பலாத்காரம் செய்துள்ளார்.இதில், சிறுமி கர்ப்பம் அடைந்தார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காங்கயம் மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். விஷ்ணு கைதானார். வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட மகிளா கோர்ட் நீதிபதி கோகிலா, விஷ்ணுவுக்கு, 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை