உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 21,500 மாணவர்கள் கல்லுாரிகளில் சேர்க்கை; திருப்பூர் கலெக்டர் தகவல்

21,500 மாணவர்கள் கல்லுாரிகளில் சேர்க்கை; திருப்பூர் கலெக்டர் தகவல்

உடுமலை: ''உயர்கல்வி வழிகாட்டுதல் உதவி மையம் வாயிலாக, மாவட்டத்தில், 21,500 மாணவர்கள் கல்லுாரிகளில் சேர்ந்துள்ளனர்,'' என திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறினார்.உடுமலை, எஸ்.கே.பி., பள்ளியில், திறன் மேம்பாட்டுக்கழகத்தின் சார்பில், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், உயர்வுக்குபடி உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம் நடந்தது. இம்முகாமில் பங்கேற்ற மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசியதாவது:தமிழக அரசு, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் படிப்பில் மட்டுமல்லாமல், வாழ்க்கையிலும் வெற்றி பெறும் வகையில், திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய 'நான் முதல்வன்' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது, அத்திட்டத்தின் கீழ், உயர்வுக்கு படி என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில், 2022 - 23 மற்றும் 2023 - 24 கல்வியாண்டுகளில், 12- மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களுக்கு, 'நான் முதல்வன் உயர்வுக்கு படி' திட்டத்தின் கீழ், உயர் கல்வி வழிகாட்டுதல், ஐ.டி.ஐ., -ல் சேர்க்கை, தொழில் வழிகாட்டுதல், உதவித்தொகை திட்டங்கள், கல்விக்கடன், நேரடி மாணவர் சேர்க்கை முகாம்கள் நடந்து வருகிறது.திருப்பூர் மாவட்டத்இதில், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற, 23,500 மாணவர்களும், உயர்கல்விக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கில், உயர்கல்வி வழிகாட்டுதல் உதவி மையம் அமைக்கப்பட்டு முகாம்கள் நடத்தப்பட்டது.இதன் வாயிலாக, மாவட்டத்தில், 21,500 மாணவர்கள் கல்லுாரிகளில் சேர்ந்துள்ளனர். அரசு பள்ளியில், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 95 சதவீதம் மாணவர்கள் கல்லுாரியில் சேர்ந்துள்ளனர். மேலும், நான் முதல்வன் உயர்வுக்குப்படி சேர்க்கை முகாம் தொடர்ந்து நடந்து வருகிறது.உடுமலையில் நடந்த முகாமில், 114 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 11 மாணவர்களுக்கு உடனடியாக கல்லுாரி சேர்க்கைகான ஆணை வழங்கப்பட்டுள்ளது.கல்லுாரியில் சேர இயலாத மாணவ, மாணவியர் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் நடத்தப்படும், குறுகிய கால தொழிற்பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம்.மேலும், எந்தத்துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது என்பது குறித்தும், அரசு நடத்தும் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.அதோடு, மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்கள், வங்கிக்கடன் சார்ந்த தகவல்கள், உதவித்தொகை மற்றும் இடஒதுக்கீடு சார்ந்த தகவல்கள் போன்ற அனைத்து தகவல்கள் வழங்கப்படும்.இவ்வாறு, பேசினார்.தொடர்ந்து, விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான, பள்ளி மாணவ, மாணவியர்க்கு கைப்பந்து போட்டியை துவக்கி வைத்தார்.இதில், உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், மண்டல இணை இயக்குனர்கள் (தொழிற்பயிற்சி) முஸ்தபா, (கல்லூரிக் கல்வி) கலைச்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் காளிமுத்து, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துர்காபிரசாந்த், உடுமலை அரசு ஐ.டி.ஐ., முதல்வர் நதிச்சந்தரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை