உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வங்கதேசத்தினர் 29 பேர் திருப்பூரில் கைது

வங்கதேசத்தினர் 29 பேர் திருப்பூரில் கைது

பல்லடம்; திருப்பூர் அருகே போலி ஆவணங்களுடன் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 29 பேரை, போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம், பல்லடம், அருள்புரம் பகுதியில் வங்கதேசத்தினர் சிலர் சட்டவிரோதமாக தங்கியிருப்பது குறித்து, கோவை தீவிரவாத தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று அதிகாலை விசாரணையில் ஈடுபட்ட போலீசார், அங்குள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த, 27 பேர் மற்றும் முருகம்பாளையத்தில் தங்கியிருந்த இருவர் என, மொத்தம் 29 பேரை கைது செய்தனர். போலீசார் கூறுகையில், 'கைதான அனைவரும் வங்கதேசத்தினர்; இவர்கள் எவ்வாறு சட்ட விரோதமாக இங்கு வந்தார்கள், எத்தனை நாட்களாக தங்கியுள்ளனர் என்று விசாரித்து வருகிறோம். பெரும்பாலானோர் போலி ஆதார் அட்டைகள் வைத்துள்ளனர். இதில், பெயர்கள் ஆங்கிலத்திலும், மற்ற விவரங்கள் வேறு மொழியிலும் உள்ளன. கைரேகை மற்றும் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்கள் புழல் சிறையில் அடைக்கப்படுவர்; கோர்ட் உத்தரவுக்கு பின், முறைப்படி வங்க தேச நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர்'' என்றனர். கைதான வங்கதேசத்தினர் பெயர்கள்:சலீம், 26, ரிடோய், 23, ரிமோன், 21, ஜிருள் அலி, 30, ஆசிக் ஹசன், 20, அஸ்ரபுல், 26, பிலா அலி, 32, கரிம் சோதர், 31, ரேபி, 21, முகமது குதுஸ், 40, முகமது ராணா, 24, முகமது ஹபில், 22, முகமது பரூக், 27, முகமது ஜோனப் அலி, 20, முகமது பிரோஸ், 21, முகமது சல்மான், 28, சோபில்குல் ரோணி, 24, சலீம், 26, அகிகுள் இஸ்லாம், 26, மோமின், 22, முகமது ஜெல்ஹாக், 23, ரோஜப் அலி, 26,பிபுல், 25, ஹசான், 23, ரோஹப், 26, முகமது சோபுஜ், 24, முகமது அசாதுல், 26, முகமது சோபுஜ், 34, அயோப், 35.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Puratchi Thondan
ஜன 13, 2025 21:31

இவர்கள் அனைவரையும் கல்லைக் கட்டி கடலில் போடவேண்டும். விசாரணை, சிறை இவையெல்லாம் வீண் செலவு. பாஸ்ப்போர்ட்டில் உள்ள பார்க்கோடு தொழில்நுட்பத்துடன் அடையாள அட்டைகள் வழங்காதவரையில் இது போன்ற கள்ள வந்தேறிகளை கண்டறிதல் மிகவும் கடினம்.


karthik
ஜன 13, 2025 17:11

இவர்கள் எப்போது வேண்டுமானாலும் கலவரத்தில் இறங்குவார்கள்... இது போல இங்கு வந்த அத்தனைபேரையும் முழுவதுமாக பிடித்து நாடு கடத்த வேண்டும். இவர்களை போன்றவர்களை தான் நரேந்திர மோடி ஊடுருவல்காரர்கள் என்றால்... அதை பாழாய்ப்போன எதிர்க்கட்சிகள் முசுலீம்களுக்கு எதிராக பேசுகிறார் என்று திசை திரும்பின.. நாட்டின் எதிரிக்கட்சிகள் ஆபாத்தாக மாறிவருகிறார்கள். இதுபோல வந்த ஊடுருவல்காரர்கள் எத்தனை பேர் தீவிரவாத அமைப்பின் தொடர்பில் மௌனமாக உள்ளார்கள் என்று கடவுளுக்கு தான் தெரியும்.


தியாகு
ஜன 13, 2025 13:13

அண்ணே, வளைகுடா நாடுகளில் உரிய ஆவணம் இல்லையென்றால் ஒரு நாள் கூட தங்க முடியாது. பேக் செய்து சொந்த நாட்டுக்கு அனுப்பி விடுவார்கள். பங்களாதேஷில் அப்பாவி இந்துக்களை கொலை செய்யும்போது எங்கே இருந்தீர்கள்.


VinothB
ஜன 13, 2025 11:28

தயவு செய்து இவ்வளவு வன்மம் வேண்டாம். அமெரிக்கா மற்றும் Gulf வளைகுடா நாடுகளில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை நினைத்துப்பாருங்கள், வங்கதேசத்தவர்கள் மீது பரிவு ஏற்படும். அதற்காக அவர்கள் இங்கு சட்ட விரோதமாக தங்கியிருப்பதை ஆதரிக்கிறேன் என்று அர்த்தம் அல்ல. இந்திய சட்டப்படி சில நாட்கள் அவர்களை சிறையில் வைத்து பின் வங்கதேசத்திற்கு அனுப்புவதே சிறந்தது. வறுமை மிகவும் கொடியது.


அம்பி ஐயர்
ஜன 13, 2025 09:22

எதுக்குத் தண்டச் செலவு??? அப்படியும் மறுபடியும் ஊடுருவி வரத் தான் போறானுங்க.. விஷ ஊசி போட்டுக் கொன்னுடனும்... அல்லது வாழ்நாள் ஊனமாக்கிட வேண்டும்....


kantharvan
ஜன 13, 2025 12:07

டிரம்ப் அமெரிக்கால இதைத்தான் ய்யருங்களுக்கு செய்ய போறாதா பேசிக்கிறாங்க


சமீபத்திய செய்தி