உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 2வது நாளாக மறியல்; 250 ஆசிரியர்கள் கைது

2வது நாளாக மறியல்; 250 ஆசிரியர்கள் கைது

திருப்பூர்; 'டிட்டோஜாக்' சார்பில் இரண்டாவது நாளாக நேற்று திருப்பூரில் நடந்த மறியலில், ஆசிரியர்கள் 250 பேர் கைது செய்யப்பட்டனர்.தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில், பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.திருப்பூர் மாவட்டத்தில், நேற்றுமுன்தினம் நடந்த மறியலில், தொடக்க பள்ளி ஆசிரியர்கள் 450 பேர் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டனர்.இரண்டாவது நாளான நேற்று, மாவட்டம் முழுவதும் தொடக்க கல்வி ஆசிரியர்கள் 2800 பேர், தற்செயல் விடுப்பு எடுத்தனர். கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு மறியல் நடைபெற்றது.'டிட்டோஜாக்' ஒருங்கிணைப்பாளர்கள் பாலசுப்பிரமணியம், ராஜேந்திரன், ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடக்க பள்ளி ஆசிரியர்கள், 250 பேர் பங்கேற்று, 'தேர்தல் வாக்குறுதிப்படி, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து, ரோட்டில் அமர்ந்து மறிய லில் ஈடுபட்டனர்.இதையடுத்து, அவர்களை கைது செய்தபோலீசார், அருகிலுள்ள மண்ட பத்தில் தங்கவைத்து, மாலையில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !