உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது

தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது

ஈரோடு:ஈரோடு, வெண்டிபாளையம் காந்திஜி வீதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் கோபிநாத், 26. தேங்காய் பறிக்கும் தொழிலாளி. இவர் தற்போது மணல்மேடு பகுதியில் மனைவி மஞ்சு, 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். வெண்டிபாளையத்தில் வசிக்கும் விவேக், 29, என்பவரின் மனைவியுடன் கோபிநாத் பேசி பழகியுள்ளார். இதையறிந்த விவேக், கோபிநாத்தை எச்சரித்துள்ளார். கோபிநாத் கடந்த, 29ல் சோலார் டாஸ்மாக் கடையில் மது குடிக்க சென்றார். விவேக், அவரது நண்பர்களிடம் கூறி, கோபிநாத்தை அடித்து உதைக்குமாறு கூறியுள்ளார். அதன்பின் விவேக் நண்பர்களான வெண்டிபாளையத்தை சேர்ந்த சரவணன், 39. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு செங்கோடம்பாளையத்தை சேர்ந்த சதீஷ், 39, ஆகியோர் சேர்ந்து, கோபிநாத்திடம் விவேக்கின் மனைவியிடம் ஏன் பேசிக்கொண்டிருக்கிறாய் என கேட்டு, டாஸ்மாக் கடை அருகே உள்ள காலியிடத்திற்கு அழைத்து சென்று சரமாரியாக தாக்கினர். கீழே கிடந்த கல்லை எடுத்தும் தலை, முகத்தில் தாக்கியுள்ளனர்.அக்கம்பக்கத்தினர் வருவதை பார்த்ததும், இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர். காயமடைந்த கோபிநாத்தை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஈரோடு தாலுகா போலீசில் கோபிநாத் மனைவி மஞ்சு அளித்த புகாரின் பேரில், சரவணன், சதீஷ் மற்றும் விவேக் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ