உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / லஞ்ச மின் வாரிய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

லஞ்ச மின் வாரிய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் : தொழிற்சாலைக்கு கூடுதல் மின் பளு வழங்க, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற மின் வாரிய உதவி செயற்பொறியாளருக்கு திருப்பூர் கோர்ட்டில் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் பகுதியில் பைபர் தொழிற்சாலை நடத்தி வருபவர் சிவகுமார். கடந்த 2011ம் ஆண்டில் இந்த ஆலையில் உள்ள 52 எச்.பி., மின் இணைப்பை 90 எச்.பி., திறனுக்கு கூடுதல் மின் பளு பெற விண்ணப்பித்தார்.பெதப்பம்பட்டி மின் வாரிய அலுவலகத்துக்கு தொழிற்சாலையின் மேற்பார்வையாளர் தாமோதரன், இதற்கான விண்ணப்பத்துடன் சென்றார். அங்கிருந்த மின் வாரிய உதவி செயற்பொறியாளர் சையது பாபு, 55, இதற்காக 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார்.கடந்த 2011 ஏப், 29ம் தேதி, லஞ்சப் பணத்தை சையது பாபு பெறும்போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரைக் கைது செய்தனர்.இதுகுறித்த வழக்கு திருப்பூர் முதன்மை குற்றவியல் நடுவர் செல்லதுரை முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அரசு வக்கீல் செந்தில்குமார் ஆஜரானார். இதில், லஞ்சம் பெற்ற சையது பாபுவுக்கு, 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Jagannathan
அக் 22, 2024 16:17

Such a stern punishment of imprisonment shall dare every government officials to ask bribe.


Jagannathan
அக் 22, 2024 16:11

லஞ்சம் பெற்றால் சிறைத் தண்டனை இவ்வாறு வழங்கப் பட்டால் லஞ்சம் கேட்க பயப்படுவார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை