போதை மாத்திரைகள் 3 இளைஞர்கள் கைது
திருப்பூர்; திருப்பூரில் கஞ்சா, குட்கா மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்கு சப்ளை செய்வது தொடர்பாக போலீசார் கண்காணித்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். நல்லுார் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பலவஞ்சிபாளையத்தை சேர்ந்த கரண், 23 என்பவரிடம் விசாரித்தனர். சமையல் மாஸ்டராக வேலை செய்து வருவதும், ஆன்லைன் செயலி மூலம் சில நாட்கள் முன் போதைக்கு பயன்படுத்த வலி நிவாரண மாத்திரைகளை வாங்கியதும் தெரிந்தது. அவரை கைது செய்து, நுாறு மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. * கணியாம்பூண்டியை சேர்ந்த சாத்ராக், 22 என்பவரும் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதும், போதைக்கு பயன்படுத்துவதும் தெரிந்தது. நல்லுார் பகுதியில் நண்பர்களுக்கு சப்ளை செய்துள்ளார்; அவரை கைது செய்து, நுாறு மாத்திரைகளை பறிமுதல் செய்யப்பட்டது. * வலி நிவாரண மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்த வாங்கி வந்த இடுவம்பாளையத்தை சேர்ந்த அசோக்குமார், 22 என்பவரை வீரபாண்டி போலீசார் கைது செய்து, 50 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.