உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு மருத்துவமனைக்காக 32 யூனிட் ரத்தம் தானம்

அரசு மருத்துவமனைக்காக 32 யூனிட் ரத்தம் தானம்

அனுப்பர்பாளையம்: திருப்பூர் முயற்சி மக்கள் அமைப்பு, தி திருப்பூர் கிளப் ஆகியன இணைந்து அரசு மருத்துவமனைக்காக 1,221வது ரத்ததான முகாமை, திருப்பூர் கிளப் வளாகத்தில் நடத்தின. திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு 32 யூனிட் ரத்தம் சேகரித்தனர். ரத்ததானம் செய்த ரத்த கொடையாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில், கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். மூன்று பேருக்கு சலுகை கட்டணத்தில் கண் அறுவை சிகிச்சைக்கு செய்ய பரிந்துரைக்கப்பட்டது. முயற்சி மக்கள் அமைப்பின் தலைவர் சிதம்பரம், துணை தலைவர் சுப்பிரமணியம், செயலாளர் விஜயராஜ், தி திருப்பூர் கிளப் தலைவர் சுகுமாரன், செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை