வைகுண்ட ஏகாதசி விழா 35 ஆயிரம் லட்டு தயாரிப்பு
பெருமாநல்லுார்: வைகுண்ட ஏகாதசியன்று பெருமாநல்லுார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆண்டுதோறும் திருப்பூர் மகா விஷ்ணு சேவா சங்கம் சார்பில், லட்டு வழங்கப்பட்டு வருகிறது. 16வது ஆண்டாக இந்த ஆண்டும் பக்தர்களுக்கு லட்டு வழங்கப்படுகிறது. மொத்தம் 300 பேர் 35 ஆயிரம் லட்டு தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில்,ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு 15 ஆயிரம் லட்டு வழங்கப்படுகிறது. மீதமுள்ள லட்டுகள் திருமுருகன்பூண்டிகரிவரதராஜ பெருமாள், சேவூர் லட்சுமி நரசிம்ம பெருமாள் உள்ளிட்ட கோவில்களுக்கு வழங்கப்படும் என்று இதன் தலைவர் தலைவர் தீபா, செயலாளர் தனபால்தெரிவித்தனர்.