கிணற்றில் 36 மணி நேரம் தேடுதல்; சடலமாக மூதாட்டி மீட்பு
அவிநாசி; அவிநாசி அடுத்த சின்னேரிபாளையம் ஊராட்சி, சூலக்கல் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கருணையம்மாள்,86; இவரது கணவர் கருப்பசாமி நான்கு மாதங்கள் முன்பு காலமானார். நேற்றுமுன்தினம் அதிகாலை வீட்டு பின்புறம் உள்ள தோட்டக் கிணற்றில் எதிர்பாராதவிதமாக கால் இடறி கருணையம்மாள் விழுந்தார். 140 அடி ஆழ கிணற்றில், 90 அடி ஆழத்திற்கு நீர் நிரம்பி நின்றது. தீயணைப்பு துறையினர் அங்கு வந்தனர். மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. விடிய விடிய தேடும் பணி தொடர்ந்தது. நேற்றும் மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. 36 மணி நேர தேடுதலுக்கு பின்பு நேற்று மாலை 6:00 மணியளவில் கருணையம்மாளின் உடல் கிடைத்தது. அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.