உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புதுமைப் பெண் திட்டம் 38,652 மாணவியர் பலன்

புதுமைப் பெண் திட்டம் 38,652 மாணவியர் பலன்

திருப்பூர்: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், புதுமைப்பெண் திட்டத்தில் கல்லுாரி மாணவியருக்கும், தமிழ் புதல்வன் திட்டத்தில், கல்லுாரி மாணவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய், வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில், புதுமைப்பெண் திட்டத்தில், கடந்த 2022 - 23ம் ஆண்டில், 6,821 மாணவியர், 2023 - 24ம் ஆண்டில், 8,381 மாணவியர், 2024 - 25 ல், 11,198 மாணவியர், நடப்பாண்டில் 12,252 மாணவியருக்கு என, மொத்தம் 38 ஆயிரத்து 652 மாணவியருக்கும், தமிழ் புதல்வன் திட்டத்தில், கடந்த 2022 - 2023 முதல் நடப்பு ஆண்டு வரை, 15 ஆயிரத்து 970 மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. தமிழ் புதல்வன் திட்டத்தில் உதவித்தொகை பெற்று சிக்கண்ணா அரசு கல்லுாரியில் விலங்கியல் இரண்டாம் ஆண்டு படித்துவரும் ராஜீவ், புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற்று, தீரன் சின்னமலை மகளிர் கல்லுாரியில் வணிகவியல் இரண்டாம் ஆண்டு படித்துவரும் டோனா அனுஷியா உட்பட பலர், இத்திட்டத்தால் மிகவும் பயனடைந்ததாக, கருத்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை