3வது திட்ட குடிநீர் நாளை நிறுத்தம்
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி துணை கமிஷனர் சுந்தரராஜன் அறிக்கை: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் புதிய திருப்பூர் மேம்பாட்டு கழகம் சார்பில் 3வது குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்கப்படுகிறதுகாவிரி ஆற்றுப்படுகையில் குடிநீர் எடுத்து இங்கு கொண்டு வந்து வினியோகிக்கப்படுகிறது. இத்திட்டம் செயல்படும் பகுதியில் மின் வாரியம் சார்பில் சிறப்பு குழு ஆண்டுதோறும் நடத்தும் தொடர் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக 21ம் தேதி காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை பணி நிறுத்தப் பராமரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் காரணமாக வரும் 21ம் தேதி காலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை இத்திட்டத்தில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும். இத்திட்டத்தில் குடிநீர் பெறும் பயனாளிகள், குடிநீரை சிக்கனமாகவும், சேமித்தும் பயன்படுத்த வேண்டும்.