உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ஒரு வீட்டுக்காக 4 தெருவிளக்கா?

 ஒரு வீட்டுக்காக 4 தெருவிளக்கா?

பல்லடம்: பல்லடம் ஒன்றியம், கரடிவாவி ஊராட்சி, கரடிவாவிப்புதுாரை சேர்ந்தவர் கார்த்திகேயன், 48. இவர், கலெக்டரிடம் அளித்த புகார்: கரடிவாவி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் மாரிமுத்து (தி.மு.க.) என்பவரின் வீட்டைச் சுற்றி நான்கு தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவரது வீட்டின் அருகே, வேறு வீடுகள், கடைகள் எதுவும் கிடையாது. ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், போதிய தெரு விளக்கு வசதிகள் இல்லாத நிலையில், ஒரே ஒரு வீட்டுக்காக, நான்கு தெருவிளக்கு அமைத்தது ஏன்? மின் வாரியம் ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில், ஒரு தனி நபருக்காக நான்கு தெரு விளக்குகள் அமைத்துள்ளதால், அரசுக்கு மட்டுமன்றி, பொதுமக்களின் வரிப்பணமும் வீணடிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விசாரித்து, மக்கள் வரிப்பணம் வீணாவதை தடுப்பதுடன், விதிமுறை மீறி தெருவிளக்குகள் அமைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஊராட்சி செயலர் சுமதியிடம் கேட்டபோது, ''இதுதொடர்பாக பி.டி.ஓ. மற்றும் மண்டல பி.டி.ஓ. ஆகியோரிடம் தெரிவித்துள்ளேன். நேரில் ஆய்வு செய்த பின் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ