உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குறுமைய சிலம்ப போட்டி; 450 மாணவர்கள் பங்கேற்பு

குறுமைய சிலம்ப போட்டி; 450 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர்; திருப்பூர் வடக்கு குறுமைய விளையாட்டில், ஏராளமான மாணவ, மாணவியர் ஆர்வம் காட்டினர். பள்ளிக்கல்வித்துறை சார்பில், வடக்கு குறுமைய சிலம்ப போட்டி, நிப்ட்-டீ கல்லுாரி மைதானத்தில் நடந்தது. கல்லுாரி முதல்வர் கோபாலகிருஷ்ணன், நிர்வாக ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி, கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் செந்தில்குமார் ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர். போட்டியில், 450 மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்று, தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். 14 வயது ஒற்றைக்கம்பு, மாணவர் பிரிவில், பாரப்பாளையம் ஊராட்சிப்பள்ளி மாணவன் சஞ்சீவ், 17 வயது பிரிவில், வித்ய விகாசினி பள்ளி மாணவன் யஷ்வந்த், 19 வயது பிரிவில், கே.எஸ்.சி., பள்ளி மாண வன் சபான் ஆகியோர்முதலிடம் பெற்றனர். மேலும், 14 வயது, மாணவியர் பிரிவில், கே.செட்டிபாளையம் அரசுப்பள்ளி மாணவி ரூபலட்சுமி, 17 வயது பிரிவில், எஸ்.கே.வி., பள்ளி மாணவி ஜெயஸ்ரீ, 19 வயது பிரிவில் விஜயாபுரம் அரசுப்பள்ளி மாணவி சஷ்டிகாஸ்ரீ ஆகியோர் முதலிடம் பெற்றனர். இரட்டைக்கம்பு சுற்றில், 14 வயது மாணவர் பிரிவில், கே.எஸ்.சி., பள்ளி இளமாறன், 17 வயது பிரிவில், வித்ய விகாசினி பள்ளி அஷ்வின்குமார், 19 வயது பிரிவில் பாரதி பள்ளி தனீஷ்ராம் ஆகியோர் முதலிடம் பெற்றனர். மாணவியர் பிரிவில், பிளாட்டோஸ் பள்ளி மாணவி சர்ஜிதா, கிட்ஸ் கிளப் பள்ளி மாணவி பிரித்திவிகா, 19 வயது பிரிவில் பழனியம்மாள் பள்ளி மாணவி கன்மதி ஆகியோர் முதலிடம் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை