மேலும் செய்திகள்
மின்மோட்டார் ஒயர் திருட்டு விவசாயிகள் வேதனை
19-Mar-2025
பல்லடம் : பல்லடம் அருகே, காப்பர் ஒயர் திருட்டில்ஈடுபட்ட, 5 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.கடந்த, மார்ச் 25ம் தேதி இரவு, பல்லடத்தை அடுத்த, வனாலயம் பூங்கா வளாகத்தில் இருந்த, 10 கிலோ காப்பர் ஒயர் திருடு போனது. இது குறித்து பன்னீர்செல்வம் என்பவர் அளித்த புகாரின் பேரில், பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். நேற்று சின்னக்கரை செக் போஸ்டில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, சந்தேகப்படும்படியாக இருந்த ஐந்து பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.அதில், அவர்கள் தர்மபுரி - பாப்பிராரெட்டியை சேர்ந்த ரகுமான், 38, அறிவரசு, 25, சின்னசாமி, 29, பழனிவேல், 31, ஈரோடு நடேஷ்குமார், 40 என தெரிந்தது. இவர்கள், அனைவரும் சேர்ந்து, வனாலயத்தில் காப்பர் ஒயர்களை திருடியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, ஐந்து பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்தனர்.இதில், சின்னசாமி மற்றும் நடேஷ்குமார் ஆகியோர் மீது தர்மபுரி மற்றும் ஈரோடு போலீஸ் ஸ்டேஷன்களில் தலா ஒரு திருட்டு வழக்கு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
19-Mar-2025