உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஒரே வாரத்தில் 50 டன் பின்னலாடைகள்;  ரயில்களில் பறக்கும் தீபாவளி ஆர்டர்கள்

ஒரே வாரத்தில் 50 டன் பின்னலாடைகள்;  ரயில்களில் பறக்கும் தீபாவளி ஆர்டர்கள்

திருப்பூர்: தீபாவளிக்கு ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், முன்பதிவு செய்த சரக்குகளை அனுப்பி வைப்பதில், பின்னலாடை உற்பத்தியாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. ஒரு வாரத்தில், 50 டன் பின்னலாடைகள் ரயில் மூலம் பயணித்துள்ளன.திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து நாள் ஒன்றுக்கு, ஆறு முதல் எட்டு டன் சரக்குகள் ரயில் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. பண்டிகை நாட்களில் பத்து முதல், 12 டன் சரக்கு பயணமாகும். தீபாவளி பண்டிகைக்கான சரக்கு முன்பதிவு செப்., இறுதியில் துவங்கினாலும், கடந்த பத்து நாட்களாக தான் கூட்ஸ்ெஷட் அலுவலகம் சுறுசுறுப்பாகியுள்ளது.பண்டிகைக்கு முன்பாக சரக்குகளை வாங்கி இருப்பு வைக்க முடியாது என்பதால், ஒரளவு விற்பனை முடிந்த பின், அடுத்தடுத்த சரக்கு வியாபாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. திருப்பூரில் இருந்து, பெங்களூரு, கொச்சின், மங்களூரு, ஓசூர் மற்றும் தென்மாவட்டங்களுக்கு தான் அதிகளவில் சரக்கு அனுப்பபடுகிறது.தீபாவளி பண்டிகை புக்கிங் என்பதால், முதல் மற்றும் இரண்டாவது பிளாட்பார்மில் வழிநெடுகிலும், சரக்கு பண்டல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. பனியன் மட்டுமின்றி, அனுப்பர்பாளையம் பாத்திரம், பர்னிச்சர் உள்ளிட்ட பொருட்களும் அனுப்பபடுகிறது.குவியும் சரக்குகள்சேலம் கோட்ட வணிகப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:திருப்பூரில் இரண்டு நிமிடத்துக்கு கூடுதலாக நிற்கும் ரயில்களில் சரக்கு ஏற்றி அனுப்பி வைக்கப்படுகிறது. புக்கிங் செய்ததில் இருந்து, 48 மணி நேரத்துக்குள் ரயிலில் சரக்கு ஏற்றி அனுப்புவதால், டெலிவரி மூன்று நாட்களுக்குள் என்பதால், தீபாவளிக்கான கடைசி கட்ட விற்பனைக்காக தினமும் பார்சல், பண்டல்கள் குவிந்து வருகிறது.திருப்பூரில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிக்கு, 20 க்கும் மேற்பட்ட ரயில்கள் மூலம் பின்னல் உள்ளாடைகள், டி சர்ட், பர்முடாஸ் உள்ளிட்டவை பயணிக்கின்றன. கடந்த ஒரு வாரத்தில், தினமும், எட்டு முதல், பத்து டன் சரக்கு வீதம், ஏழு நாட்களில், 50 டன் வரை சரக்குகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, நவ., 1 வரை புக்கிங் நிறைந்துள்ளது,' என்றனர்.-----

வருவாய் உயர வாய்ப்பு

வழக்கமான நாட்களில் புக்கிங் மூலம், 80 முதல், 90 ஆயிரம் வருவாய் கிடைக்கும் நிலையில், தீபாவளி புக்கிங் காரணமாக நாள் ஒன்றுக்கு, 1.10 லட்சம் ரூபாய்க்கு சரக்கு முன்பதிவாகி பயணிக்கிறது. இதனால், நடப்பு அக்., வருவாய் உயரும் வாய்ப்புள்ளது.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ