உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 500 இடங்கள்; 6,444 பேர் போட்டி

500 இடங்கள்; 6,444 பேர் போட்டி

பல்லடம் அரசு கலைக்கல்லுாரி முதல்வர் மணிமேகலை அறிக்கை:கல்லுாரியில் மொத்தமுள்ள, 500 இடங்களுக்கு, 6,444 மாணவ, மாணவியர் இதுவரை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். கல்லுாரி இணையதளத்தில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 'கட் ஆப்' மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் அழைக்கப்பட்டு வருகின்றனர். வரும் 3ல், விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர் படை, படை வீரர்கள் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள தமிழர்கள் ஆகியோருக்கான சிறப்பு கலந்தாய்வு சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் நடைபெற உள்ளது.வரும் 5 மற்றும் 6ம் தேதி பி.காம்., பி.காம்.,-- சி.ஏ., பி.காம்.,- - பி.ஐ.,; ஜூன் 9 மற்றும் 10ம் தேதி, பி.எஸ்.சி., வேதியியல், கணிதம், கணினி அறிவியல், சி.டி.எப்., ஆகிய பாடப்பிரிவுகளுக்கு சேர்க்கை நடைபெறும்; 11ம் தேதி பி.ஏ., தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவுகளுக்கும் சேர்க்கை நடைபெறும். மாணவர்கள், உரிய ஆவணங்களுடன் காலை 9:30க்குள் வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை