மேலும் செய்திகள்
ஆதார் சிறப்பு முகாம்; பொதுமக்கள் ஆர்வம்
22-Aug-2025
அவிநாசி; அவிநாசி அடுத்த தெக்கலுாரில், தெக்கலுார் ரோட்டரி, தபால் துறை, கொங்கு அறக்கட்டளை இணைந்து மூன்று நாட்கள் ஆதார் சிறப்பு முகாமை நடத்தின. ஐந்து முதல் 15 வயது வரை உள்ளோருக்கு கைரேகைகள், கண் கருவிழி புதுப்பித்தல் மற்றும் புதிய ஆதார் பதிவு செய்தல் ஆகிய சேவைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன. 547 பயனாளிகள் பதிவு செய்தனர். திட்ட சேர்மன் சண்முகம் தபால் ஊழியர்களை பாராட்டி சால்வை அணிவித்தார். ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் ஆலோசனை வழங்கினார். ரோட்டரி தலைவர் சிவக்குமார், செயலாளர் அருண்குமார், பொருளாளர் பாரதி நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
22-Aug-2025