உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தபால் வாடிக்கையாளரிடம் 5ம் தேதி குறைகேட்பு 

 தபால் வாடிக்கையாளரிடம் 5ம் தேதி குறைகேட்பு 

திருப்பூர்: தபால் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கான குறைகேட்பு கூட்டம், வரும் 5-ம் தேதி நடக்கிறது. திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் எதிரே உள்ள தலைமை தபால் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில், தபால் சேவை தொடர்பான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை பொதுமக்கள் நேரில் தெரிவிக்கலாம். மேலும், தபால் அல்லது இ--மெயில் மூலமாகவும் மனுக்களை அனுப்பலாம். மனுக்களை dotirupur.indiapost.gov.inஎன்ற இ--மெயில் முகவரிக்கு அனுப்பலாம் என, திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !