உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உரிய ஆவணமின்றி தங்கியிருந்த வங்கதேசத்தினர் 6 பேர் கைது

உரிய ஆவணமின்றி தங்கியிருந்த வங்கதேசத்தினர் 6 பேர் கைது

திருப்பூர் : திருப்பூரில் கடந்த, 15 நாட்களாக முறைகேடாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த, ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் நகரில், வடமாநிலத்தினர் போர்வையில் வங்கதேசத்தினர் ஊடுருவல் தொடர்பாக மாநகர போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் தெற்கு போலீசார் மற்றும் அதிவிரைவு படையினர் நேற்று மத்திய பஸ் ஸ்டாண்டில் சுற்றித்திரிந்த வடமாநிலத்தினரிடம் விசாரித்தனர்.ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பரிசோதனை செய்தனர். அவர்களில், ஆறு பேரிடம் இருந்த ஆவணங்கள் போலி மற்றும் வங்கதேசத்தினர் என்பதும் தெரிந்தது. தொடர்ந்து, ஆறு பேரையும் தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.அதில், கவுகாத்தி வழியாக சென்னை வந்து, அதன்பின் ரயிலில், திருப்பூக்கு வந்து, ஊத்துக்குளி அருகே பனியன் நிறுவனத்தில் வேலை செய்தனர். ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால், ஆறு பேரையும் பனியன் நிறுவன உரிமையாளர் வேலையில் இருந்து நிறுத்தி விட்டனர்.இதனால், பல்லடத்துக்கு செல்ல திட்டமிட்டு, மத்திய பஸ் ஸ்டாண்ட் வந்த போது சிக்கியது தெரிந்தது.இதனையடுத்து, உரிய ஆவணங்கள் இல்லாமல் முறைகேடாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த தன்வீர், 39, ரசிப்தவுன், 43, முகமது அஸ்லம், 41, முகமது அல் இஸ்லாம், 37, முகமது ராகுல் அமின், 30 மற்றும் சவுமுன் ஷேக், 38 என, ஆறு பேரையும் திருப்பூர் தெற்கு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !