மேலும் செய்திகள்
பட்டாசு கடைகள்; போலீஸ் ஆய்வு
18-Oct-2024
திருப்பூர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க பொதுமக்களிடம் இருந்து போலீசார், 154 மனுக்களை பெற்றனர். இதில் முதற்கட்டமாக 66 தற்காலிக பட்டாசு கடைகள் வரும், 25ம் தேதி(நாளை) முதல் அக்., 31 ம் தேதி வரை (ஏழு நாட்கள்) செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.நேற்று, போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு, பட்டாசு கடை உரிமையாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.அவர்களிடம் ஒப்புதல் அனுமதி வழங்கி போலீஸ் கமிஷனர் லட்சுமி, ''தற்காலிக பட்டாசு கடை அமைப்பதற்கான பாதுகாப்பு விதிமுறைகள், நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் இடையூறு இல்லாமல் பாதுகாப்பான முறையில் தீபாவளி கொண்டாட ஒத்துழைக்க வேண்டும்'' என, அறிவுரை வழங்கினார்.
18-Oct-2024