| ADDED : நவ 27, 2025 05:02 AM
உடுமலை: நாட்டின் 76வது அரசியலமைப்பு தினத்தையொட்டி பள்ளிகளில், மாணவ, மாணவியர் உறுதிமொழி ஏற்றனர். உடுமலை பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் ஜெகநாதஆழ்வார்சாமி முன்னிலை வகித்தார். திருப்பூர் மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட தொடர்பு அலுவலர் சரவணன், இந்திய அரசியலமைப்பு தின வரலாறு குறித்து விளக்கமளித்து பேசினார். அரசியல் அமைப்பு தின உறுதிமொழியை மாணவ, மாணவியர் ஏற்றனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜான்பாஷா நன்றி தெரிவித்தார். * மடத்துக்குளம் ஒன்றியம், போத்தநாயக்கனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், உதவி ஆசிரியர் ராமமூர்த்தி முன்னிலையில், மாணவ, மாணவியர் அரசியலமைப்பு முகவுரை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். * இதே போல், மேற்கு குமரலிங்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சர்க்கார்கண்ணாடிப்புத்துார் உள்ளிட்ட பள்ளிகளிலும் மாணவ, மாணவியர் உறுதிமொழி ஏற்றனர். * குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி தலைமையாசிரியர் பழனிசாமி மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில், மாணவ, மாணவியர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.