உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / செட்டிபாளையம் அடுக்குமாடி குடியிருப்பில் 77 பேருக்கு வீடு

செட்டிபாளையம் அடுக்குமாடி குடியிருப்பில் 77 பேருக்கு வீடு

திருப்பூர்; செட்டிபாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்வதற்கான குலுக்கல் நேற்று நடைபெற்றது. இதில், பயனாளிகள் 77 பேர் பங்கேற்று, வீடு ஒதுக்கீடு பெற்றனர்.தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், திருப்பூர், 11 செட்டிபாளையத்தில், ரூ.23 கோடி மதிப்பீட்டில், ஐந்து கட்டங்களில், 240 வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. 1.96 லட்சம் ரூபாய் பயனாளி பங்களிப்பு தொகை செலுத்தியோருக்கு, குலுக்கல் நடத்தி, அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.முதல்கட்டமாக பயனாளிகள், 70 பேருக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 78 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்வதற்கான குலுக்கல், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடத்தப்பட்டது.நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி பொறியாளர்கள் சர்மிளாதேவி, கார்வேந்தன் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.அடுக்குமாடி குடியிருப்பில் காலியாக உள்ள வீடுகளுக்கு குலுக்கல் நடத்தப்பட்டது. பயனாளிகள் எடுத்த சீட்டுக்களில் இருந்த எண் அடிப்படையில் வீடு ஒதுக்கப்பட்டது. நேற்றைய குலுக்கலில், 77 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு, குலுக்கலில் தேர்வான வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.பங்களிப்பு தொகை செலுத்தியபின், மீதமுள்ள 93 பயனாளிகளுக்கு குலுக்கல் நடத்தி, வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை