உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மாநகரில் 9 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

 மாநகரில் 9 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

திருப்பூர்: திருப்பூர் மாநகர போலீசில் இருந்த, ஒன்பது இன்ஸ்பெக்டர்கள் கோவைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சட்டசபை தேர்தல் நெருங்குவதால், ஒரே இடத்தில் ஒன்று மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் இடமாற்றம் செய்யும் பணி துவங்கியுள்ளது. கோவை மண்டலத்துக்கு உட்பட்ட மாநகர போலீசில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து, கோவை மண்டல ஐ.ஜி., செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். கோவை, திருப்பூர் சேலம் மாநகர போலீசில் இருந்து, 33 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், ஒன்பது பேர் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்; கோவை மற்றும் சேலத்தில் இருந்து, 10 பேர் திருப்பூருக்கு மாற்றப்பட்டுள்ளனர். இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன் (வீரபாண்டி), விநாயகம் (நல்லுார்), இளங்கோ (திருமுருகன்பூண்டி), பிரகாஷ் (எஸ்.ஐ.சி.), கவிதா (15 வேலம்பாளையம்), ராஜேஸ்வரி (திருப்பூர் தெற்கு), தாமோதரன் (மங்கலம்), ஜெகநாதன் (திருப்பூர் வடக்கு), ராஜ சேகர் (மத்திய குற்றப்பிரிவு) ஆகியோர் கோவை மாநகர போலீசுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவையில் இருந்து, தங்கம் (கரும்புக்கடை), ராஜசேகர் (காட்டூர்), நிர்மலாதேவி (சரவணம்பட்டி), செந்தில்குமார் (எஸ்.ஐ.சி.), மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள் பரிமளாதேவி, ரேணுகாதேவி, டி.ஐ.டபிள்யூ., - ராஜேஷ், சேலம் மாநகர போலீசில் இருந்து, இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், ஜெகநாதன், பவுல்ராஜ் ஆகியோர் திருப்பூர் மாநகரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ