உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தபால் குறைகேட்பு புகார் அனுப்பலாம்

தபால் குறைகேட்பு புகார் அனுப்பலாம்

தபால் துறை மற்றும் தபால் ஆயுள் காப்பீடு தொடர்பான குறைகளை, வரும் 12-ம் தேதிக்குள் அனுப்பலாம் என, திருப்பூர் தலைமை தபால் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் தெரிவித்துள்ளார். கோவை கே.பி. காலனியில் உள்ள தபால் மேற்கு மண்டல அலுவலகத்தில், கோவை மண்டல அளவிலான தபால் குறைகேட்பு கூட்டம் விரைவில் நடக்க உள்ளது. கூட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும். குறைகளை, 'உதவி இயக்குனர், தபால்துறை தலைவர், மேற்கு மண்டல அலுவலகம், கோவை-641 030' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தபால் உறையின் மீது 'DAK ADALAT CASE' என குறிப்பிட வேண்டும். பதிவு, விரைவு, காப்பீடு தபால் உள்ளிட்ட புகார்களில் அனுப்பிய தேதி, தபால் எண், அலுவலகத்தின் பெயர் உள்ளிட்ட முழு விவரங்களையும்; சேமிப்பு வங்கி, காப்பீடு புகார்களில் கணக்கு அல்லது பாலிசி எண் உள்ளிட்ட விவரங்களையும் குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ